தர்மபுரியில்அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
தர்மபுரி:
தர்மபுரியில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட இணைச்செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், செண்பகம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்கள் மற்றும் பூ கமிட்டி அமைக்க வேண்டும். மகளிர் அணியினர் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகளை பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், சங்கர், கோவிந்தசாமி, உலக மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் நீலாபுரம் செல்வம் நன்றி கூறினார்.