இந்து முன்னணி கூட்டம்

Update: 2023-09-05 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ராஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் முருகன், வேடியப்பன், மாவட்ட துணைத் தலைவர் முனிசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மொத்தம் 160 விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அரசு விதிகளை முறையாக பின்பற்றி விநாயகர் சிலைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் இடங்களில் வைத்து வழிபாடு நடத்த வேண்டும். விநாயகர் சிலைகளை ஒதுக்கீடு செய்யப்படும் நீர் நிலைகளில் விதிகளை சரியாக பின்பற்றி கரைக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்