மொரப்பூர்:
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் நவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி அழகரசு தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவிசங்கர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கணேச மூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சியின் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.