தர்மபுரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி:
தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.