மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-02-26 18:45 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் உள்ள மீனாட்சி அம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள், கோ பூஜை, யாத்ரா தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று காலை கடம் புறப்பாட்டை தொடர்ந்து மூலவர் மற்றும் விமான கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

விழாவில் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்