மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தியான வழிபாடு
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தியான வழிபாடு நடந்தது.
நாட்டறம்பள்ளி தாலுகா, ஜங்களாபுரம் கூட்ரோட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தியான வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. தணிகை நாதன், ராமநாதன் ஆகியோர் மாணவர்களுக்கான தியான பயிற்சி வழங்கினர். மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் சுய கருத்து, அமைதி பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் தங்கவேல், முதல்வர் செண்பகா தேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.