தேனி அரசு மருத்துவமனை முன்பு மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் போராட்டம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-20 21:00 GMT

மருத்துவ காப்பீட்டு திட்ட நலச்சங்கம் சார்பில் ஊதிய குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணை 219-ஐ ரத்து செய்ய வேண்டும். ஊதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அடிப்படை ஊதிய உயர்வை நிர்ணயம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் காப்பீட்டு திட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

அதன்படி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு சங்கத்தின் பொருளாளர் ராஜ்மோகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் ஏராளமானோர், கோரிக்கை அட்டைகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சுகாதாரத்துறை செயலாளர், திட்ட இயக்குனர் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்