ஆனைமலை
ஆனைமலையை அடுத்த தேவிபட்டம் பகுதியில் இருந்து சேத்துமடை பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அவை தீ வைத்து எரிக்கப்படுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு உடல் நல கோளாறு ஏற்படும் அபாயம் நிலவியது. இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சுகாதார ஆய்வாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் தூய்மை பணியாளர்கள் மூலம் மருத்துவ கழிவுகளை அகற்றினர். மேலும் மருத்துவ கழிவுகளை கொட்டியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.