கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருத்துவத்துறை ஊழியர்கள்

Update: 2022-06-28 16:47 GMT

மருத்துவத்துறையில் உள்ள அனைத்து நிலை காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், புற ஆதார நிலை ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை கூட்டமைப்பினர் கோரிக்கை அட்டை அணிந்து  பணியாற்றினர்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய அனைத்து மருத்துவத்துறையினரும் கோரிக்கை அட்டை அணிந்திருந்தனர். இதனையடுத்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரல் முறையீடு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கலெக்டர், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில தலைவர் விவேகானந்தன், கூட்டமைப்பு தலைவர் ராம்குமார், செயலாளர் அந்தோணி ஜெயராஜ், பொருளாளர் அழகர்சாமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்