மக்களை தேடி மருத்துவ களப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மக்களை தேடி மருத்துவ களப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-16 18:50 GMT

பெரம்பலூரில் மக்களை தேடி மருத்துவ களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்களை தேடி மருத்துவ களப்பணியாளர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும், மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை மகளிர் திட்ட அலுவலரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்