புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவ அணி சார்பில் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இலவச மருத்துவ உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் ஸ்ரீராம், வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், புதூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் உள்படபலர் கலந்து கொண்டனர்.