மருத்துவ கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.;
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரியில் நடந்தது. முகாமுக்கு முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், பணியாளர் செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர். நேற்று மலை வரை சுமார் 300 பேர் ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கினைப்பாளர் இஸ்ரேல் ராஜா ஜான்லி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சபரி ராஜா, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சாந்தி, மாணவப் பிரதிநிதிகள் விஜய் சூர்யா மற்றும் ஹேமதர்சினி ஆகியோர் செய்து இருந்தனர்.