மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் கமிஷனரிடம் மனு

மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு மகராஜ நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-04-26 20:14 GMT

மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு மகராஜ நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் புதன்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார். துணை கமிஷனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இதில் 33 பேர் கலந்து கொண்டு புகார் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று அதன் விபரங்களை கேட்டறிந்து மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் கமிஷனர் உறுதி அளித்தார்.

மகாராஜ நகர்

இதில் முன்னாள் கவுன்சிலர் பாலன் என்ற ராஜா தலைமையில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

பாளையங்கோட்டை மகாராஜ நகரில் இயங்கி வரும் போலீஸ் நிலையம், முன்பு ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. அதனால் அது திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டது.

பின்னர் அங்கு இடம் மறுக்கப்பட்டதால், போலீஸ் நிலையம் வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது மகாராஜ நகர் ரவுண்டானா அருகில் புதிய சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்த இடம் மகாராஜா நகர் காலனி உருவான போது, போலீஸ் நிலையத்துக்கு என்று 20 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்ட இடமாகும்.

எனவே அந்த போலீஸ் நிலையத்தின் பெயரை மாற்றி விட்டு, மகாராஜ நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.

22 மனுக்களுக்கு தீர்வு

இதேபோல் நெல்லை புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், பொது மக்களிடம் இருந்து 27 மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த 35 மனுக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் தலைமையில் விசாரணை நடத்தி 22 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்