மக்களை தேடி மருத்துவ முகாம்

விக்கிரமசிங்கபுரத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-04-02 20:07 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெரு ரேஷன் கடை முன்பு மக்களை தேடி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கவுன்சிலர் செல்வகுமாரி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் டாக்டர் சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர்கள் அகஸ்தியன், பெஞ்சமின் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்