திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-10-01 18:30 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 பிர்கா அலுவலகத்தின்கீழ்-208 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுமார் 416 கிராம உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் திருப்பத்தூர், ஆண்டியப்பனூர், கொரட்டி, கந்திலி, ஜோலார்பேட்டை, புதூர்நாடு, நாட்றம்பள்ளி, அம்மாணங்கோயில், வாணியம்பாடி, அம்பலூர், ஆலங்காயம், ஆம்பூர், மாதனூர், துத்திப்பட்டு, எம்.எஸ்.குப்பம் உள்ளிட்ட 16 இடங்களில் நேற்று நடந்தது.

முகாமில் காய்ச்சல், தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் ஆகியவற்றிக்கான அனைத்து பரிசோதனைகளும், தோல் நோய்கள், கண்புரை கண்டறிதல், பல் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூரில் நடந்த முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மாவட்டம் முழுவதும் நடந்த மருத்துவ முகாமில் கிராம உதவியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 964 பேரும், பொதுமக்கள் 1264 பேரும் என மொத்தம் 2264 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்