தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமுகாம்
சாத்தான்குளம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமுகாம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரால் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் உஷா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் முன்னிலை வகித்தார். முகாமில் மக்களைத் தேடி மருத்துவ குழுவினரால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. முதலூர் மருத்துவ அலுவலர் அட்சரா தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். கிராம சுகாதார செவிலியர் பெர்னத், சுகாதார ஆய்வாளர் மதியழகன், செவிலியர் ஷேர்லி, மருந்தாளுனர் பரிமளா, ஆஷா பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வல பணியாளர்கள் உட்பட முதலூர் சுகாதார நிலைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை பேரூராட்சி மன்ற தலைவி ரெஜினி ஸ்டெல்லா பாய், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் செய்திருந்தனர்.