தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அன்னவாசல் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மணியன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, கை, கால் மூட்டு வலி, ரத்த பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் உப்பு குறைபாடு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் செல்களின் எண்ணிக்கை பரிசோதனை மேலும் இதய பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை மற்றும் இலவசமாக மருந்துகள் வழங்கினர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.