கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம்

திருமக்கோட்டைஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-12-25 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நிலைய டாக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முகாமில் மகப்பேறு டாக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின், சர்க்கரை, உப்பு, மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் செவிலியர்கள் கற்பகவல்லி, ஜெயந்தி, ஆர்த்தி, சீதாலட்சுமி, செந்தமிழ், செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்