கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
முதுகுளத்தூர் அருகே கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலகுறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச தோல் கழலை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச தோல் கழலை தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட கால்நடை வளப்போர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர் வினிதா, கால்நடை ஆய்வாளர் வீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.