கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து அலுவலத அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் 270 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.