41 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

நெமிலியில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Update: 2023-09-22 14:46 GMT

நெமிலி வட்டார வளமைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித் துறை உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் 223 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 41 நபர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற 137 பேருக்கும், உதவி உபகரணங்கள் பெற 13 பேருக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்