மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நாளை மறுநாள் முதல் 17-ந் தேதி வரை நடைபெறும்

மாற்றுத்திறனாளி மாணவர்கள், குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை மறுநாள் முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-22 10:52 GMT

மருத்துவ முகாம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஒன்றியம் வாரியாக 24-1-2023 முதல் 17-2-2023 வரை கீழ்கண்ட நாட்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

திருவள்ளூரில்

திருவள்ளூர் ஒன்றியத்தில் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேப்பம்பட்டு ஊராட்சி, ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும்.

திருத்தணி ஒன்றியத்தில் 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மீஞ்சூர் ஒன்றியத்தில் 28-ந் தேதி (சனிக்கிழமை) பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். சோழவரம் ஒன்றியத்தில் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பிப்ரவரி 2-ந் தேதி (வியாழக்கிழமை) ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்

புழல்

புழல் ஒன்றியத்தில் பிப்ரவரி 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். பூண்டி ஒன்றியத்தில் பிப்ரவரி 4-ந் தேதி (சனிக்கிழமை) பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பிப்ரவரி 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். கடம்பத்தூர் ஒன்றியத்தில் பிப்ரவரி 9-ந் தேதி (வியாழக்கிழமை) கடம்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பிப்ரவரி 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.

எல்லாபுரம்

எல்லாபுரம் ஒன்றியத்தில் பிப்ரவரி 11-ந் தேதி (சனிக்கிழமை) பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிப்ரவரி 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும். திருவாலங்காடு ஒன்றியத்தில், பிப்ரவரி 16-ந் தேதி (வியாழக்கிழமை) திருவாலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும். பூந்தமல்லி ஒன்றியத்தில் பிப்ரவரி 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

மேற்கண்ட ஒன்றியங்களில் நடைபெறும் முகாம்களில் தேசிய அடையாள அட்டை, அறுவை சிகிச்சை மற்றும் உதவி உபகரணம் தேவை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்