மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
திருக்கோவிலூர் அருகே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
திருக்கோவிலூர்
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவமுகாம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் நடைபெற்றது. இதை விழுப்புரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தன்வேல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண்பார்வை, செவித்திறன், மனவளர்ச்சி கற்றல், உடல் இயக்க மூளை முடக்குவாதம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு பரிந்துரை செய்தனர். இதில் முகையூர் வட்டார மேற்பார்வையாளர் தமிழரசன், ஆசிரிய பயிற்றுனர்கள் ஏழுமல, ஆனந்த், சம்பத், சிறப்பு பயிற்றுனர்கள் முத்துக்குமார், விமலா, ஜான்சி, புஷ்பராணி, இயன்முறை மருத்துவர்கள் சவுந்தரராஜன், சத்யவதி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.