மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
அரியலூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை மாவட்ட திட்ட அலுவலர் பழனியாபிள்ளை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் செல்லப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன் சவுந்தரராஜன், வட்டார மேற்பார்வையாளர்(பொறுப்பு) ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 142 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் இயன்முறை மருத்துவர் ரேவதி, வேங்கை அம்மாள், உதவியாளர் கிருஷ்ணவேணி மற்றும் பல்வேறு துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் சிறப்பு பயிற்றுநர்கள் கோவிந்தன், அன்னராசு, எழிலரசி ஸ்டெல்லா விமலாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.