மருத்துவ முகாம்
அச்சம்பத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அருகே அச்சம்பத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. அச்சம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமி இருளப்பன், வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் பொது மருத்துவம், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், கர்ப்ப வாய் பரிசோதனை, இ.சி.ஜி., சிறுநீர், சளி, ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. சித்த மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.