தாந்தோணிமலையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று கரூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ெதாடங்கி வைத்தார். இதில் கண், காது குறித்தான பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயம் தொடர்பான பரிசோதனை இதய வாழ்வு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் வக்கீல் சங்க மாவட்ட தலைவர் மாரப்பன், செயலாளர் தமிழ்வாணன், பொருளாளர் சம்பத், டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.