இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-29 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடியில் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணிதிட்டம், தமிழன் பவுண்டேஷன் டிரஸ்ட், டைம் டிரஸ்ட் மற்றும் மதுரை லட்சுமணா சிறப்பு மருத்துவமனை இணைந்துஇலவச மருத்துவ முகாம்நடத்தியது. முகாமிற்கு இளையான்குடி மேல்நிலைப்பள்ளி செயலாளர் முசாபர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழன் பவுண்டேஷன் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி அஜ்மல்கான் கவுத், ஆயிர வைசிய சபை தலைவர் கணபதி, செயலாளர் ரகுராமன், டைம் டிரஸ்ட் டிரஸ்டி சையது உசேன், சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மகளிருக்கான கர்ப்பப்பை கோளாறு, கட்டிகள், வெள்ளைப்படுதல் போன்ற பெண்களுக்கான உடல் நல பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் குறித்த சிறப்பு பரிசோதனைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மருத்துவம், உளவியல் நிபுணர்களின் ஆலோசனை, பொது மருத்துவ ஆலோசனை பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தும், தற்காலிகமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. சிறப்பு மருத்துவர் பாலச்சந்திரன், நிர்வாக இயக்குனர் சாந்தி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனைகள், சிகிச்சைகள் அளித்தனர். இந்தமுகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்