கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் ராக்கு குமரேசன் முன்னிலை வகித்தார். கால்நடை டாக்டர்கள் முருகன், ஸ்ரீவித்யா, பிர்தவ்ஸ் ஆகியோர் ஆடு, மாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளித்தனர்.
200 பசு மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசியும், 53 மாடுகளுக்கும், 515 ஆடுகளுக்கும் குடல் புழு நீக்க மாத்திரைகளும், 54 பயனாளிகளுக்கு தாது உப்பு வழங்கப்பட்டது. 22 ஆட்டுக்கிடாய்களுக்கு ஆண்மை நீக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 16 பசு மாடுகளுக்கு மலட்டுத்தன்மையை நீக்கி குணப்படுத்தினார்கள். சிறந்த கன்றுக்குட்டிகளை வளர்த்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்கள் முத்துக்குமரன், ராமரதம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராமச்சந்திரன், தென்னரசு, செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.