இட்டமொழி:
சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வள்ளியூர் பல்நோக்கு சமூகசேவை சங்கம், நெல்லை கேன்சர் கேர் சென்டர் இணைந்து பெண்களுக்கான புற்றுநோய் கண்டறிவதற்கான சிறப்பு முகாமை நடத்தியது. முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு டாக்டர் சிந்தியா தலைமையில் உடல் பரிசோதனை நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி ஆகியோர் செய்திருந்தனர். இதில் சமூகரெங்கபுரம் ஊராட்சி செயலர் மாரியப்பன், வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.