சிறப்பு மருத்துவ முகாம்

மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-16 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாத்துரை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜய் சந்திரன், குடும்ப நலம் துணை இயக்குனர் யோகவதி ஆகியோர் தலைமையில் மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமில் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களுக்கு ரத்த பரிசோதனை, சிறுநீர் பிரச்சினை, இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் 366 நபர்களுக்கு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை யூனியன் மேலாளர் தவமணி செய்து இருந்தார். இதில் நகராட்சி ஆணையாளர் சக்திவேல், தாசில்தார் சாந்தி, ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, நகராட்சி கவுன்சிலர் சண்முகபிரியா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்