வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

கோட்டூர் அருகே வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது

Update: 2022-10-01 18:45 GMT

கோட்டூர்;

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டாரம் சேந்தங்குடி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை நடைபெற்றது. மேலும் கொரோனா தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலைமுருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் அன்பரசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேஸ்வரிசற்குணம் (சேந்தங்குடி), செருவை கார்த்தி (செருவாமணி) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்