மருத்துவ முகாம்

சாத்தூரில் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவுநாளையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-06-02 19:13 GMT

சாத்தூர், 

சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாபந்தியின் இறுதிநாளான நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வருவாய் நிர்வாக அலுவலர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பால்துரை, சாத்தூர் வட்டாட்சியர் சீதாலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமின் ஒரு பகுதியாக ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்