வடுவூர்:
வடுவூர் அருகே உள்ள வடுவூர் தென்பாதி கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடத்தப்பட்ட இம்முகாமை நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சோமசெந்தமிழ் செல்வன் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சூரியசேகர், ஒன்றிய கவுன்சிலர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உடல்தானம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.