வலங்கைமானை அடுத்த 44 ரகுநாதபுரம் ஊராட்சி அணியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சத்தியபாமா முன்னிலை வகித்தார். முகாமை ஒன்றியக்குழு தலைவர் கே.சங்கர் தொடங்கி வைத்து பேசினார். முகாமில் ஊராட்சி செயலர் கார்த்தி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக தொழில் நுட்ப உதவியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.