மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Update: 2023-09-22 18:45 GMT

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் வட்டார மையத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமில் 61 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இயலாத்தன்மை மற்றும் சதவீதத்தின் அடிப்படையில் முறையாக அரசு பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், வீட்டு வழிகற்றல், பள்ளி ஆயத்தபயிற்சி மையங்கள் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு இயல் முறை மருத்துவர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மதிப்பீட்டு முகாமினை விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வர் சங்கு மணி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர். உதவி திட்ட அலுவலர் ஜமுனா ராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் லதா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்