தியாகதுருகம் அருகே அரசு பஸ் மோதி மெக்கானிக் சாவு

தியாகதுருகம் அருகே அரசு பஸ் மோதி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-06-27 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேந்திரன் (வயது 26). தியாகதுருகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் தியாகதுருகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீரசோழபுரம் நோக்கி புறப்பட்டார். தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கரீம்ஷாதக்கா வளைவு அருகே சென்றபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேந்திரனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேந்திரன் நேற்று பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்