கோவை: கடனை திரும்ப செலுத்த முடியாததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

கோவை அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-17 12:32 GMT

கோவை:

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மகன் பழனிபாரதி (வயது 25). கிரைண்டர் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்நண்பர்களிடம் கடன் வாங்கி புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கினார். நண்பர்களிடம் வாங்கிய கடனை அவர்கள் திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த பழனி பாரதி அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முத்துக்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்