மொபட்டை திருடிய மெக்கானிக் கைது

மொபட்டை திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-29 20:17 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜென்கின் பிரியா (வயது 42). இவர் பெரம்பலூர் அருகே உள்ள தெற்கு மாதவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி தனது மொபட்டை வேப்பந்தட்டையில் நிறுத்திவிட்டு பஸ்சில் ஏறி வடக்கு மாதவி சென்றுள்ளார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மொபட்டை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னமங்கலத்தை சேர்ந்த மெக்கானிக் சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்