தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம்

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம் என்று தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2022-06-02 22:07 GMT

தாராபுரம்

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம் என்று தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

பொதுக்கூட்டம்

மத்திய பா.ஜனதா ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ருத்திரகுமார். மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது:-

 3 இலாகா

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.86 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. பங்கு தொகையை விடுவித்தது. அதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.9,608 கோடி வழங்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது மத்திய மந்திரியாக உள்ள முருகன் கடுமையாக உழைத்து சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரவையில் 3 இலாகாக்களை கொடுத்து அழகு பார்த்துள்ளது. இதனால் தாராபுரம் மக்களுக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மாற்றத்திற்கான முன்னேற்றத்தை தேடிக்கொண்டிருக்கிறது. வருகிற 2024-ம் ஆண்டு ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவர் கட்டாயம் நாடாளுமன்றம் செல்வார்.

ஊழல் குறித்த பட்டியல்

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட எந்த ஒரு மந்திரி மீதும் சிறிதளவு கூட குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்றனர். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்திற்கு பா.ஜ.க. சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் செல்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்