குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை

நெடும்புலி ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2023-05-08 18:33 GMT

பனப்பாக்கம் அருகே உள்ள நெடும்புலி ஊராட்சியில் தென்மாம்பாக்கம் ஏரிக்கால்வாய் செல்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த கால்வாயில் மழைநீர் நிரம்பி நெடும்புலி ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதி, தாசில்தார் குடியிருப்பு, கிராம நிர்வாக அலுவலகம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த மழைநீர் புகுவதை தடுக்க நீர்வளத்துறை சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மண் மூட்டைகளை கொண்டு தடுப்பு பணியில் ஈடுபட்டனர். தென்மாம்பாக்கம் ஏரிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாராமல் உள்ளதால் மழை வரும்போதெல்லாம் கால்வாயிலிருந்து மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. உடனே ஏரிக்கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்