வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி

வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-08 06:24 GMT

சென்னை,

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்புதல் வழங்கியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில்,

கோவையில் 112 ஏக்கரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு அதிமுக ஆட்சியில் தான் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. சிஎம்டிஏவில் ஒற்றை சாளர முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களில் பணிகள் முடிந்தவுடன் ஒற்றை சாளர முறை மூலமே அனைத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 10ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஒற்றை சாளர முறையை முழுமையாக கொண்டுவர ஓராண்டுகாலம் ஆகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்