கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 1-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2023-02-26 18:32 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மாடுகளுக்கு தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 1-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21-ந் தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் கால்நடை வளர்ப்போர்கள் தங்களிடம் உள்ள மாடுகள் அனைத்திற்கும் சினைமாடுகள், கன்றுகள் உள்பட தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், கிடேரி கன்றுகளின் உரிமையாளர், பெயர் விலாசம், தடுப்பூசி போடப்பட்ட விவரம், கால்நடைகளின் இனம் ஆகிய விவரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கால்நடை நிலையங்களில் உள்ள பதிவேட்டிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் மூலம் கால்நடை வளர்ப்போருக்கு அரசால் அறிவிக்கப்படும் கால்நடைகள் சம்பந்தப்பட்ட திட்ட பயன்கள் எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்