தியாகதுருகம் பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் மருத்துவ முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை

தியாகதுருகம் பகுதியில் கால்நடைகளை அம்மை நோய் தாக்கியுள்ளதால் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-25 18:45 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் பகுதிக்குட்பட்ட பானையங்கால், சிறுநாகலூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் அம்மை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாடுகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு வட்ட வடிவ கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் எழுந்து நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு விவசாயிகள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே அம்மை நோய் தாக்குதல் முழுவதுமாக பரவுவதற்கு முன்பாக கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம் நடத்தவும், பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் கால்நடை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தியாகதுருகம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்