ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
பாளையங்கோட்டையில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை பஸ்நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திவான், கல்லத்தியான், அரசு அமல்ராஜ், சுதர்சன், பொன்வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.