ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு காயிதே மில்லத் விருது

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் சிறந்த ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை தியாகராயநகரில் நடந்தது.

Update: 2022-07-04 02:46 GMT

சென்னை:

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை தியாகராயநகரில் நடந்தது. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில், காயிதே மில்லத் விருது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கும், அம்பேத்கர் விருது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்துக்கும், தந்தை பெரியார் விருது மனித உரிமைச் செயல்பாட்டாளர் பிரபா கல்விமணிக்கும், பழனிபாபா விருது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுக்கும் வழங்கப்பட்டன. இதுதவிர பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி, ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்