ம.தி.மு.க. இளைஞரணி சார்பில் தென்னங்கன்றுகள்
துரை வைகோ பிறந்தநாள் விழா ம.தி.மு.க. இளைஞரணி சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் ம.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி சார்பில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ பிறந்தநாளையொட்டி தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு, பேரூர் செயலாளர் கருணாநிதி, துணை செயலாளர் முருகேசன், பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.குத்தாலம் வர்த்தக சங்க தலைவர் தங்கப்பன் வரவேற்றார்.இதில் மாநில இளைஞரணி செயலாளர் ஆசைதம்பி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், நக்கம்பாடி ஊராட்சி செயலாளர் காளிமுத்து உள்ளிட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.