வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) திருப்பூர் வருகிறார்.

Update: 2023-06-26 16:44 GMT

ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) திருப்பூர் வருகிறார். இதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு இன்று மாலை 4.30 அவர் வருகிறார். பின்னர் கோவையில் இருந்து கார் மூலமாக திருப்பூர் வரும் வைகோ, மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி வீட்டில் அவருடைய தாயார் சுப்பாத்தாள் மறைவையொட்டி துக்கம் விசாரித்து, படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார். இன்று இரவு திருப்பூரில் உள்ள ஓட்டலில் தங்கும் வைகோ நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பொங்கலூரில் நடைபெறும் திருப்பூர் மாவட்ட முன்னாள் துணை செயலாளர் கவின்நாகராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். திருப்பூருக்கு வருகை தரும் வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன், அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாநகர் மாவட்ட, பகுதி, வட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்