எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது..!

எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

Update: 2023-07-25 05:28 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தற்போது தொடங்கியுள்ளது. http://tnmedicalselection.org, http://tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக கலந்தாய்வு தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வு இன்று முதல் வருகிற 31ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களை பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 3ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்