எம்.பி.ஏ. பட்டதாரி தற்கொலை

எம்.பி.ஏ. பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-10 19:21 GMT

திருச்சி மேல சிந்தாமணி நடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பத்ரிநாதன் (வயது 35). எம்.பி. ஏ, பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டு மதியம் 2 மணி அளவில் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். ஆனால் அவர் சாப்பிடாமல் அறைக்கு சென்றார்.

அதன்பின் மாலை 5 மணி ஆகியும்அறைகதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைகதவை திறந்து பார்த்தபோது, அவர் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்ரிநாதன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்