வடிகால்களை மேயர் ஆய்வு

தூத்துக்குடியில் வடிகால்களை மேயர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-03 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய், மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை கால்வாய் போன்றவை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே முடிவடைந்த வடிகால் பகுதிகளிலும், பணிகள் நடந்து வரும் வடிகால்களிலும் வீடுகளில் உள்ள குப்பைகளை பொதுமக்கள் போட்டுவிடுவதால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இந்த அடைப்பை எடுக்க தூய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறுஞ்சிநகர் பகுதியில் உள்ள வடிகால்களை மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை வடிகால்களில் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அகற்ற தூய்மை பணியாளர்களை அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் இது போன்று குப்பைகள், கழிவுகளை கால்வாய்களுக்குள் கொட்டும் செயலில் ஈடுபட்டு மாநகராட்சிக்கும், தூய்மைப்பணியாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம். தூய்மையான மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.




Tags:    

மேலும் செய்திகள்